முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த மாவத்தகம பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

131 0
மாவத்தகம பொலிஸ் நிலையத்தில்  முதியவர் ஒருவரால்  வழங்கப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம்  செய்யப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (17) முதியவர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குச்  சென்று  மருமகன் தனது மகளை தாக்குவதாக கூறியபோதும், இந்த முறைப்பாட்டை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பதிவு செய்ய  மறுத்துள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்  மாவத்தகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த  பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.