எல்லயில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம் !

151 0

எல்ல -வெல்லவாய, கரடகொல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று  செவ்வாய்கிழமை (17) காலை  குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வீதியினூடாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.