தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பெங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே நிறைவுசெய்வது உட்பட இருதரப்பு ஆர்வமுள்ள விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக இலங்கையை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவ அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

