ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

260 0

ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு, 3 அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீங்கள் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சிலரால் ஈ.பி.டி.பி யும் தொடர்வுபட்டிருப்பதாக  குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என ஊடகவியலாளர்களால்  தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கு முருகேசு சந்திரகுமார் பதில் அளித்திருந்தார்.

தென்னிலங்கையில் இருந்து செயற்படுகின்ற அமைப்பான சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு, சம உரிமை இயக்கம் மற்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன குறித்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் முகமாக போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.