லெபனானில் இஸ்ரேலிப் படையினர் இன்று தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் ஒன்று ஏவப்பட்டதையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனானிலிருந்து 3 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில், ஒன்று லெபனான் பிராந்தியத்துக்குள் வீழ்ந்ததுடன், மற்றொரு ரொக்கெட் இஸ்ரேல் எல்லையிலுள்ள சர்ச்;சைக்குரிய பகுதியொன்றுக்குள் வீழ்ந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரொக்கெட் ஏவப்பட்ட பகுதியை நோக்கி இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

