ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம்

184 0

இந்த வருடம் மக்கா மற்றும் மதீனாவில் ஹஜ் யாத்திரையின் போது மூன்று இலங்கை யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்ற இருவர்  கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.

கொலன்னாவையைச் சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக மக்காவில் மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

மேலும், கொழும்பைச் சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில் புதன்கிழமை இடம்பெற்ற விபத்தொன்றின் போது மரணித்ததாக திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை, குருணாகலை, பானகமுவ பகுதியைச் சேர்ந்த ஹாஜி ஒருவர் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மினாவில் உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் இலங்கையிலிருந்து சுமார் 3,500 பேர் ஹஜ் கடமைக்காக  சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.