கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
சத்திர சிகிச்சைக்கு முன்னர் கொடுக்கப்பட்ட மயக்க மருந்தினால் ஏற்பட்ட சில சிக்கல்களினால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (06) கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர், சத்திர சிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இரண்டு குழந்தைகளின் தாயாரான இவருக்கு அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டதாக ரவி குமுதேஷ் குற்றம் சாட்டினார்.

