சீ சீ டீவி உபகரணங்கள் கையளிப்பு

160 0

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் ஆயிஷா  மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தனவந்தர் ஒருவரால் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான சீசீடீவி கேமராக்களும்  அதற்குரிய உபகரணங்கள் மற்றும் கூலர்  05 கையளிக்கப்பட்டுள்ளது. 

இப்பாடசாலையில் மிக நீண்ட காலமாக  காணப்பட்ட குறைபாட்டினை தனவந்தர் ஒருவரினால் நிவர்த்திக்கப் பட்டுள்ளது.இவ் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு  அப் பாடசாலையின் அதிபர் எஸ்.சாகிதீன் தலைமையில் நடைபெற்றது  இதன் போது தனவந்தரான எம்.ஐ. எம் முபாரிஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .