எல்நினோ தாக்கம் குறித்து ஐ.நா எச்சரிக்கை

60 0

உலகம் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாக்க தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு தயாராவது  இன்றியமையாதது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ  தாக்கத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.

புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான காரணியான கார்பன் உமிழ்வு புதிய எல் நினோவிற்கு வித்திட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு இதன் விளைவை  வெப்பநிலையின் இரட்டை தாக்கம் (double whammy)  என உலக வானிலை அமைப்பு  அழைக்கிறது.

இது தீவிர வானிலை மற்றும் வெப்பநிலையை மிகைப்படுத்துவதோடு, உலகம் முழுவதும் நிலத்திலும் கடலிலும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் ஆண்டின் இறுதி வரை எல் நினோவின் 90 சதவீத தாக்கம் மிதமான வலிமையில் அல்லது அதிகமாக தொடரும் என  உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆண்டின் இறுதியில் வலுவான மற்றும் அதிக வெப்பமான எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு  56 சதவீதமாக இருந்தது என ஜூன் மாதம்  ஆரம்ப  மதிப்பீட்டில் அமெரிக்க அதிகாரிகளால்  கூறப்பட்டது.

பசிபிக் கடல் பரப்பில் காற்று மற்றும் கடல் வெப்பநிலையில் இயற்கையான மாறுபாடுகள் எல் நினோவிற்கும் அதன் குளிர்ச்சியான லா நினாவிற்கும் இடையில் ஒழுங்கற்ற மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இந்த இயற்கை காலநிலை மாற்றம் பூமியில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கின்றன.