இஸ்ரேலிய தலைநகரில் காரைபயன்படுத்தி தாக்குதல் – ஏழுபேர் படுகாயம்

139 0
image

இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் காரை பயன்படுத்தி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

வணிகவளாகத்திற்கு வெளியே நின்றிருந்த பாதசாரிகள் மீது 20 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் காரால் மோதியுள்ளார்.

அவர் காரிலிருந்து வெளியேவந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தமுயன்றவேளை சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

துணிச்சல் மிக்க நபர் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலிற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது