பிரபல தமிழக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் போட்டியில் தேர்வாகிய யாழ் மாணவி கில்மிஷா

237 0

யாழ் மண்ணுக்கு இசையால் புகழ் சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி கில்மிஷா தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இவர் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்கிறார்.

இவர் இயல்பாகவே பாடும் திறமை கொண்டவர்.

தமிழக தொலைக்காட்சியொன்று நடத்தும் சிறுவர்களுக்கான பிரபல இசை நிகழ்ச்சியின் தேர்வுப் போட்டியில்  வெற்றி பெற்று இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்கள் நடுவர்களாக உள்ள அரங்கில் பாடுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார்.இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக குறித்த தொலைக்காட்சியின் இசை மேடையில் அவரது குரலும் யாழின் அடையாளமாக ஒலிக்கும்.

https://fb.watch/lxpTwOQ2t4/?mibextid=YCRy0i