யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் விபத்து(காணொளி)

283 0

யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லான்மாஸ்ரரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், இருபாலை பழம் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு பயணித்த லான்மாஸ்ரரும் மோதிக் கொண்டன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கால் முறிந்து தொங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.