வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மௌனப்பேரணி

372 0

தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகால் நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 21 வது நாளாகத் தொடரும் நிலையில் இன்று இம் மௌனப் ரோடாத்தில் ஈடுபட்டனர்.

ஒடுக்கப்பட்ட எமது தொழிலுரிமை எனும் தலைப்பில் தூக்கிகிடப்பட்ட உருவமொன்றைச் சுமந்துவாறு பெருமளவிலான பட்டதாரிகள் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தில் பேரணியைடி ஆரம்பித்து பல்வேறு வீதிகளுக்கூடாகச் சென்று மீண்டும் சத்தியாக்கிர இடத்தை அடைந்தனர்.

சுமார் 1600 வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 2 நாட்களாக சத்தியாக்கிரப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிபிடத்தக்கது.