பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் விடுதலை

243 0
இஸ்ரேல் பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற ஜோர்தான் இராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்தானின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஜோர்தான் எல்லையிலுள்ள தீவுப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேல் மாணவிகள் மீது குறித்த ஜோர்தான் இராணுவ வீரர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஏழு மாணவிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இராணுவ வீரருக்கு ஜோர்தான் இராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த இராணுவ வீரரின் மனநலக்குறைவை காரணம் காட்டி அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.