நிதி அமைச்சினால் இரு அரச திணைக்களங்கள் மூடப்பட்டன

189 0

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இரு திணைக்களங்களை மூடுவதாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளக வர்த்தக திணைக்களம் மற்றும் தொலைதொடர்பாடல் திணைக்களம் ஆகியவையே மூடப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகளின் கீழ் தாபிக்கப்பட்ட உள்ளக வர்த்தக திணைக்களமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 1957ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தொலைத்தொடர்பாடல் திணைக்களமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.