பம்பலப்பிட்டியில் முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி உயிரிழப்பு

135 0

கொழும்பு – பம்பலப்பிட்டி, மரைன்டிரைவில் இன்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, அதன் கட்டுப்பாட்டை இழந்து, ஜயா வீதியில் உள்ள தொலைபேசிக் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி கண்டியை சேர்ந்தவர் என்றும் அவர் விபத்தின் ஏற்பட்டதன் பின்னர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.