மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணைந்து, சிறுவர்களை துறவிகளாக நியமிப்பதற்கான வயது வரம்பை அறிமுகப்படுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
‘துறவிகளாக மாறிய பின்னர் சிறுவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டே இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க நாம் முன்வந்துள்ளோம். அது தவிர, சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க, அத்தகைய வயது வரம்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

