தனியார் விடுதியொன்றுக்கு மதில் கட்டும் போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (16) மாலை 04 மணிக்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த இருவரும் காலி – ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடையவர்களாவர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.