இந்தியாவில் ஐந்து மானிலங்களில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்.

233 0

இந்தியாவில் ஐந்து மானிலங்களில் இடம்பெற்ற மானிலங்கலவைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.

பஞ்சாப், உத்திர பிரதேஷ், உத்திரகாண்ட், மனிப்பூர் மற்றும் கேவா ஆகிய மாநிலங்களில் இந்த தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த தேர்தல் முடிவுகளின்படி, உத்தர பிரதேஷ் மாநிலத்திலுள்ள 403 தொகுதிகளில் 317 இல் பாரதீய ஜனதா கட்சியினர் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

இதில் காங்கிரஸ் கூட்டணி 63 தொகுதிகளை மாத்திரமே வெற்றிகொண்டது.

இதேவேளை, உத்தரகாண்ட மாநிலத்தில் மொத்தமாகவுள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 58 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமாகவுள்ள 117 தொகுதிகளில் 76 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

இதேவேளை, ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளை பெற்று இரண்டாம் இடத்திலும் பாரதீய ஜனதாகட்சி கூட்டணி 18 மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதேவேளை மனிப்பு மாநிலத்தில் 27 தொகுதிகளுடன் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளதுடன் கோவாவில் 16 தொகுதிகளுடன் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.