பொரலஸ்கமுவையில் பெண்ணை ஆயுதமுனையில் அச்சுறுத்தி கொள்ளை!

153 0

பொரலஸ்கமுவ, கட்டுவாவெல மாவத்தையில் உள்ள வீடு ஒன்றுக்குள்  நுழைந்து  அங்கிருந்த பெண்ணுக்கு  கொலை மிரட்டல் விடுத்து வீட்டிலிருந்த சுமார் ஒரு கோடி  ரூபா பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்ற நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக  பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டின் உரிமையாளர் துறைமுக அதிகார சபையிலும்   அவரது மனைவி வங்கி  முகாமையாளராகவும் பணிபுரிகின்றனர். மேலும் ஒரு பெண் அங்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் செய்வதும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பணிப்பெண் வீட்டில் தனியே இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.