ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

220 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும், இந்த சந்திப்பில் கலந்துரையாட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.