நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உயிரிழந்துள்ளார்.
நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலையில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த அதிபர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இறந்த அதிபர் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

