நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் பதிவிட்டுள்ளார்.

