வவுனியா நகரில் நேற்று சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின்போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, காரொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, காரிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஜமுத்து கைப்பற்றப்பட்டது.
அத்தோடு, காரில் இருந்த 26 மற்றும் 23 வயதுடைய தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

