சுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – கமல் குணரத்ன சந்திப்பு

217 0

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின், பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.

இதன்போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டிற்குள், சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு, இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புக்கள், மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்பு செயலாளரால், தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.