காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

361 0

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 16ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனிசிச கட்சியினரால் இலங்கை அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கண்டி வீதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கண்டனப்பேரணி, வவுனியா பசார் வீதிவழியாக கொரவப்பொத்தான வீதியை அடைந்து அங்கிருந்து உண்ணாவிரதம் நடைபெறும் தளத்தை சென்றடைந்தது.

உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகைக்கு முன்னாள் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு, மைத்திரி ரணில் அரசே அரசியல் வாக்குறுதி என்னாச்சு, வேண்டும் வேண்டும் பிள்ளைகள் வேண்டும், கானாமல் ஆக்கப்பட்டோரை காட்டுமையா, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.