தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்: ஓபிஎஸ் அறிவிப்பு

79 0

தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இயக்கத்தைப் பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஏற்கெனவே, மேகேதாட்டு அணை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டின் அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. இதுதான் அரசியலமைப்புச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.