பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

79 0

கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய  மாணவியொருவர் கிணற்றில் வீழ்ந்து  உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.