இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

55 0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய திறைசேரி திணைக்களத்தின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான தனது சந்திப்பின்போது, பிரதி உதவிச் செயலாளர் 75 வருட கால இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் நிலையான, வளமான நாடு என்ற தனது பகிரப்பட்ட பார்வையை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் கலந்து கொண்டார்.