காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாகவும், அந்த ஆலோசனையை சவாலுக்கு உட்பட்டுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இது குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், இந்த வழக்கினை அதன் பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு அழைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.
இதற்கமைய குறித்த முறைப்பாட்டை எதிh்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க நீதவான் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்போது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக்காண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

