வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில்…..

270 0
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்குப் புதிய நுழைவாயில் திறப்பு விழா இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா அதிபர் பா. கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜனும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர். மு.இராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா ஆகியோரும் நிகழ்வின் சிறப்புச் சொற்பொழிவாளராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கலந்து கொண்டனர்.
.இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட ஈகொன் ஐகொன் என்ற வினாடிவினாப் போட்டியில் வெற்றியீட்டியமைக்காக வழங்கப்பட்ட நிதியின் பெரும்பங்கைக் கொண்டு பாடசாலையின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
.நிகழ்வில் ‘மாண்புறு தோரணவாயில்’ என்ற பொருளில் அமைந்த சிறப்புரை மற்றும் பாடசாலை மாணவியரின் நடன நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. ஈகொன் ஐகொன் போட்டியின் ஊடாகப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் துணைத்தூதரால் கௌரவிக்கப்பட்டனர்.
.இந்தப் பாடசாலை 1934 ஆம் ஆண்டில் திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச் சங்கத்தால் தொடங்கப்பெற்ற பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வவுனியாவில் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாக விளங்குகின்றது.