புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்

82 0

இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி   திறந்து வைக்கிறார்.

சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்