சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

388 0

வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம், பரசங்குளம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று திரிவதாகவும் அச்சிறுத்தை இதுவரை மூன்று மாடுகளை கொன்றுள்ளதாகவும்,  பசு ஒன்றினை சிறுத்தை தாக்கியதாகவும் அதனை கண்ட பொதுமக்கள் அதனை துரத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுத்தையின் நடமாட்டத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளதுடன், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.