தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

257 0

மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்தியா- இலங்கை மீனவர்களிடையே இதுவரை நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்துக்கு முற்றிலும் மாறாக 21 வயதான மீனவ இளைஞன் கே.பிரிட் ஜோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, தமிழக மீனவர்களைக் கைது செய்தும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும் அட்டுழியம் செய்து வரும் இலங்கை கடற்படையினர் தற்போது சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு எங்களது மீனவர்களை கைது செய்வது, கொல்வது மற்றும் அவர்களுடன் செல்பவர்களை, படுகாயமடையச் செய்வதுமாக இருந்து நியாயத்துக்கு புறம்பாகச் செயல்பட்டு துப்பாக்சிச் சூடு நடத்தி வருகிறார்கள்.  இந்திய மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது என்பது மனித உரிமையை மீறிய ஒன்றாகும். இலங்கை கடற்படையின ரின் இந்தக் கொடூரத் தாக்குதல் மாநில மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது. தாங்கமுடியாத கடும் கோபத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மீனவர்களைக் காக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற எண்ணமும் அதிருப்தியும் நிலவுகிறது. இந்திய மீனவர்களை தாக்க மாட்டோம் என்று கொள்கை அளவில் இலங்கை அரசு ஒப்புக் கொண்டாலும், இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழியின்படி இலங்கை அரசு செயல்படுவதில்லை.  உங்கள் முன்ளிலையில் சர்வதேச அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை தன்னுடைய செயல்களின் மூலம் இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக மீறி வருகின்றனர்.

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படையினர் தங்களது துப்பா க்கி முனையில் அச்சுறுத்த முடியாது. இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களது பாதுகாப்பிற்கு உறுதி தரவேண்டிய முழு பொறுப்பு இந்திய கடலோர காவல்படைக்கு உண்டு.

பாரம்பரியமான மீன்பிடி உரிமையை நிலை நாட்டவும் உரியமுறையில் பாதுகாப்பையும் தமிழக மீனவர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து நடை பெற்று வரும் இத்தகையச் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காண உரியமுறையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் விழைகிறார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தீர்வு காணப்பட வில்லை.   எனவே, இந்திய மீனவர்களின் நலன்கருதி, தாங்கள் உடனடியாக இதில் முறையாகத் தலையிட்டு, இலங்கை அரசின் பொறுத்துக்கொள்ள முடியாக நிலைப்பாடுகளை கண்டிக் கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது.

உங்களுக்குள்ள அதிகாரத்தின் கீழ், தூதரக மட்டத்தில் இலங்கை அதிகாரிகளை அழை த்து, இதுபோன்ற கொடூரங்களும் பலியாவதும் இனியும் தொடரப்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்திய மீனவர்களின்ள பாரம்பரிய உரிமையை மீண்டும் நிலைநாட்ட, உடனடியாக கச்சத் தீவை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கச்சத்தீவை மீட்பது ஒன்றே இலங்கை கடற்படையினரின் மனிதாபிமானமற்ற தாக்குதலை தடுத்து நிறுத் துவதற்கான ஒரே தீர்வாகும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.