ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்

132 0

உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பயங்­க­ரங்­களை சில அரபுத் தலை­வர்கள் புறக்­க­ணிக்­கின்­றனர் என உக்ரேன் ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் ‍நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு குற்­றம்­சு­மத்­தினார்.

இந்த உச்­சி­மா­நாட்டில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக, உக்­ரே­னிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியும் கலந்து­கொண்டார்.

உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பின்னர் மத்­திய கிழக்­குக்கு ஸெலென்ஸ்கி விஜயம் செய்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.. ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கியின்

பிரெஞ்சு அரச விமா­ன­மொன்றின் மூலம் போலந்­தி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி பய­ணித்தார் என சவூதி அரே­பி­யா­வுக்­கான பிரெஞ்சு தூதுவர் தெரி­வித்­துள்ளார்.

அரபு லீக் மாநாட்டில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி, 2014 ஆம் ஆண்டு ரஷ்­யா­வினால் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட கிரை­மி­யா­வி­லுள்ள முஸ்­லிம்­களை இந்த யுத்தம் எந்­த­ளவு பாதித்­துள்­ளது என விளக்­கினார்.

“ரஷ்ய ஆக்­கி­ர­மிப்­பினால் முதலில் கிரை­மி­யாவே பாதிக்­கப்­பட்­டது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிரை­மி­யாவில் இது­வரை அடக்­கு­மு­றைக்­குள்­ளான பெரும்­பா­லானோர் முஸ்­லிம்கள்” என ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி கூறினார்.

“துர­திஷ்­ட­வ­ச­மாக உல­கிலும், இங்கும், உங்கள் மத்­தி­யிலும் உள்ள சிலர் சட்­ட­வி­ரோத இணைப்­பு­களை பாரா­த­வர்­களைப் போல் உள்­ளனர்'” என அவர் கூறிய­துடன் இவ்­வி­ட­யத்தில் நேர்­மை­யான பார்வை வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

உக்­ரேனின் பிராந்­திய ஒரு­மைப்­பாட்­டுக்கு அளிக்கும் ஆத­ர­வுக்­காக சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மத் பின் சல்­மா­னுக்கு; ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். ‘ரஷ்யாவின் சிறைக் கூண்டுகளிலிருந்து’, மக்களை பாதுகாப் பதில் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.