அவிசாவளை இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் நிறுத்தும் மாநகர சபைக் கட்டிடத்தில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குள் இரவு நேரத்தில் பிரவேசித்த நபரொருவர் அங்கு திருட்டில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் அவிசாவளையில் மேலும் இரண்டு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களிலும் இவ்வாறு திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718591423 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சீதாவக்க பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கொடிதுவக்குக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

