வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாநயக்கவுக்கு எதிராக மாகாண சபையில் அரசாங்க தரப்பினரினால் கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (07) வட மேல் மாகாண சபை கூடியபோது இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு விஜயத்தில் உள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஆளுனருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும், அதுவரையில் இத்தீர்மானத்தை சபைக்கு முன்வைக்காதிருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், வட மேல் மாகாண சபையைக் கேட்காமலேயே தீர்மானங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வருவதாகவும் ஆளுனர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

