மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு – டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை

262 0

மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரியராக பணியாற்றி வந்த ஜி.என்.சாய்பாபா கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சாய்பாபாவுடன் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாய்பாபா மீதான வழக்கு மராட்டிய மாநில உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்தும் அவர் உத்தரவிட்டார்.

இதய நோயால் அவதிப்பட்டு வரும் சாய்பாபா சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழித்து வருகிறார். சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட இவர் பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறலுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.