டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

308 0

தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம் ஆண்டு கலந்தார். தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவாக டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினரால் 5 ஆவது தடவையாக கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி 04.03.17 அன்று கோர்சன்ஸ் நகரில் நடத்தப்பட்டது. நிகழ்வின் முதல் நிகழ்வாக தேசத்தின் குரல்அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கும், மாமனிதர் சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு , மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் 31 உள்நாட்டு கழகங்கள் பங்குபற்றின. இது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கிறோம். முதற் தடவையாக கூடிய கழகங்கள் பங்கு பற்றி உள்ளன. இளம் பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் விளையாட்டில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக இருந்தது. போட்டிகளில் பங்கு பற்றிய அனைத்து வீரர்களும் மிகவும் உற்சாகமாக விளையாடியதை காணக்கூடியதாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டது. கரப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியானது ” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ” என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.

வெற்றி பெற்றவர்களின் விபரம்

A பிரிவு

3ஆம் இடம் Nyborg A
2ஆம் இடம் Samurai
1ஆம் இடம் LVTJ
சிறந்த விளையாட்டு வீரன் – வினித் பாலசிங்கம் LVTJ அணி

C பிரிவு
3 ஆம் இடம் Tamil boys
2ஆம் இடம் Hobro C2
1ஆம் இடம் Sakkalaka baby
சிறந்த விளையாட்டு வீரன் – Sakkalka baby அணியை சார்ந்த சுகின் ரவிச்சந்திரன்

சிறப்புக்கிண்ணம்- வளர்ந்து வரும் விளையாட்டு வீரன் கனிசன்

45+ பிரிவு
2ஆம் இடம் Dantam
1ஆம் இடம் Aarhus Express
சிறந்த விளையாட்டுவீரன் – கிருஸ்ணகுமார் Aarhus Express