வெசாக்கை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் விடுதலை!

159 0

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்று (5) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் 988 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கமைய, வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், தண்டப் பணம் செலுத்தாதோர், தண்டனைக் காலம் நிறைவடையும் நிலையில் இருந்தோர் என 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் முன்னிலையில், சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான அறிவுரைகள் அக்கைதிகளுக்கு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர்.