யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அதன்போது, கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

