கெக்கிராவை, இலுகேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்னால் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தில் கைதான 24, 31, 42 மற்றும் 43 வயதுடைய இவர்கள் கெக்கிராவை மற்றும் மாத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
புதையல் பெறுவதற்காக வீட்டின் பின்புறத்தில் பாரிய குழி தோண்டப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

