பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணி

140 0

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் பணி  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டம் இன்று  (23.04.2023) கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பணியில் மக்கள் பலரும் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

குறித்த கையொப்ப பிரதிகளானது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.