சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு!

150 0

சாவகச்சேரி, சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் தனது வீட்டு வளவினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்த  கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து, அவர் அந்த கைக்குண்டை  சாவகச்சேரி, தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு எடுத்துச்சென்று, இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதனையடுத்து, இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது சாவகச்சேரி பொலிஸார் இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.