எல்ஜிபிடிகியு சமூகத்தினர் குறித்த சட்ட சீர்திருத்தங்களிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவு

149 0

இலங்கையின் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு தங்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ள உரிமைகளிற்கு தனது ஆதரவைவெளியிடடுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு  இந்த விடயம் தொடர்பான சட்ட சீர்திருத்தங்களிற்கும் தனது ஆதரவுகளை வெளியிட்டுள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் பிரதிநிதிகள் குழுவொன்று மனித உரிமை ஆணைக்குழுவை சந்தித்தவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த ஆதரவை வெளியிட்டுள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற சந்திப்பின்போதே  மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடிதமொன்றை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரிடம் எல்ஜிபிடிகியு சமூகத்தின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.