வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் 10 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

344 0

வவுனியாவில் கடந்த 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05) 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தமது ஆதரவினையினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.