தேர்தல் ஆணைக்குழு விடுத்த விசேட அறிவிப்பு!

177 0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இம்மாதம் 25 ஆம் திகதி நடத்த இருந்த நிலையில் குறித்த தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தேர்ததலுக்கான புதிய திகதி, உயர் நீதிமன்றின் தீர்ப்பு அல்லது தேர்தலுக்கான நிதி ஒதுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.