1984 இன் சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்

150 0

1984 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை இனப்படுகொலையாக அங்கீகரிக்குமாறு அமெரிக்காவின் பாராளுமன்றத்திடம் கலிபோர்னியா மாநில சட்டமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான இத்தீர்மானத்தில் கலிபோர்னியா சட்டமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1984 நவம்பரில் இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்குமாறும் அதனை இனப்படுகொலையாக அங்கீகரிக்குமாறும் இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

இச்சட்டமன்றத்தின் அங்கத்தவராக தெரிவான முதல் சீக்கியரான ஜஸ்மீத் கவுர் பாய்ன்ஸ், இப்பிரேரணையை முன்வைத்திருந்தார் என அமெரிக்காவின் குருத்வாரா பர்பான்தாக் குழுவின் தலைவர் பிரீட்பால் சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை வலிமைப்படுத்துவில் சீக்கியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வiகியல் ஏப்;ரல் 14 ஆம் திகதியை தேசிய சீக்கிய தினமாக பிரகடப்படுத்துவத்றகான தீர்மானமொனறை அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.