இரு குழுக்களுக்கு இடையில் மோதல் நால்வர் காயம் ; 8 பேர் கைது

180 0

நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றின் கலந்து கொண்ட இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் மோதல் சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாகொல்லாகம நகரப்பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த இருகுழுக்குளுக்கு இடையில் மோதல் இடம்பெற்று நால்வர் காயமடைந்த நிலையில் நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 118 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காயமடைந்த நால்வரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பி மற்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 47 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாகொல்லாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.