புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
12 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை 11 ,12 , 13 ஆகிய தினங்களில் மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

